Tamilan Seeman Videos is now Tamil Cat | சீமான் வீடியோஸ் இனி தமிழ்-கேட் என்ற பெயரில் தொடர உள்ளது… | 15 July 2015

2015-07-18 3

நாம் தமிழர் கட்சிக்காக தமிழன் சீமான் வீடியோஸ் செய்துகொண்டிருந்த ஊடக வேலைகளை நாம் தமிழர் கட்சியின் தலைமையே தொடர்ந்து செய்ய உள்ளது. ஆதலால் இதுவரை தமிழன் சீமான் வீடியோஸ்-க்காக செயல்பட்டு வந்த குழு இனி தமிழ்-கேட்.காம் (Tamil Cat.com) என்ற பெயரில் பொதுதளத்தினை உருவாக்கி தங்களது வேலைகளை தொடர உள்ளது…

இவ்விடத்தில் பொது தளம் என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கு எழலாம்.பொது தளம் என்பது கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி நிகழ்வுகள், செய்திகள், விவாதங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள், சினிமா செய்திகள், போன்ற அனைத்தையும் பதிவிடுவது ஆகும்.

எனவே தமிழன் சீமான் வீடியோசிற்கு இதுவரைக்கும் ஆதரவு தந்த நல்ல உள்ளங்கள் தொடர்ச்சியாக தமிழ் கேட்.காம்-ற்கும் (TamilCat.com) ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முக்கிய குறிப்பு:- இதுவரைக்கும் நாங்கள் நாம் தமிழர் கட்சியின் செய்திகளை மட்டுமே பதிவிட்டு வந்தோம். இனிமேல் என்ன ஒரு சிறிய வித்தியாசமென்றால் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி செய்திகளையும் பதிவிடுவோம்.